விஷமாகும் தின்பண்டங்கள்... இனி தமிழகத்திலும் பஞ்சுமிட்டாய் விற்க தடை! அமைச்சர் அறிவிப்பு

 
பஞ்சு மிட்டாய்

 

தமிழகத்திலும் பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய தடை செய்யப்பட்ட Rhodamine b வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது  கண்டுபிடிக்கப்பட்டதால், தமிழ் நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுவாசிக்கிற காற்றில் கூட விஷத்தைக் கலப்பார்கள் போல... தேசம் முழுவதுமே உணவு பொருள் விற்பனை விஷயத்தில் அப்படி தான் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. குறிப்பாக தமிழகம், கேரளம், புதுவை என தென்னிந்தியாவில் உணவு பொருட்களில் கலப்படம் என்பது உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.

பஞ்சு மிட்டாய்

புதுவை கடற்கரை பகுதிகளில் மட்டுமல்லாமல் பிரபலமான சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் குறித்து போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. இதை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலம் மோசம் அடைந்ததாக புகார் கூறப்பட்டது.இதையடுத்து போலீசார் அங்கே சில பஞ்சு மிட்டாய்களை வாங்கி ஆய்வு செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறையினர் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 'பிங்க்' நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். கார்சினோஜென் கெமிக்கல்கள் இதில் இருந்ததாக கூறப்படுகிறது. கார்சினோஜென் என்பது புற்றுநோயை உண்டாக்கும் செயற்கை நிறமியும், ரசாயனமும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சுமிட்டாய்


புதுச்சேரியில் குழந்தைகள் வாங்கி சாப்பிட பஞ்சு மிட்டாயில் ரொடமின் பி என்ற நச்சு பொருள் இருப்பதை கண்டுபிடித்து உணவுத்துறை அதிகாரிகள் பஞ்சு மிட்டாய் விற்பவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிலர் தமிழகத்தில் இருந்து வாங்கி வந்ததாக கூறியதையடுத்து, தமிழகத்திலும் இது போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ் நாட்டில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களிலும் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web