குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு!

 
குற்றாலம்
 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியதைத் தொடர்ந்து தென்மாவட்டங்கள் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று இரண்டாவது நாளாகவும் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நீடித்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.

குற்றாலம்

இந்த நிலையில், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை 3வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி ஆகிய இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில் உள்ளது. அருவிக்கரைகளுக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை...சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

நேற்று முழு நாளும் மழை விடாமல் பெய்ததால், மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவு கூட தெரியாத அளவுக்கு நீர் பெருக்கெடுத்து ஓடியது. பழைய குற்றாலம் அருவியில் கிளைநீரோடைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரு வெள்ளமாக காட்சியளித்தது. இதனால் நடைபாதைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் அங்குச் செல்ல வேண்டாமென மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்மழையால் விவசாயிகள் பாசனப்பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?