இல்லத்தரசிகள் அதிர்ச்சி... மகளிர் உரிமைத் தொகைக்கு தடை? !

 
மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. 

திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மகளிர் உரிமைத் தொகை

நிராகரிக்கப்பட்டோரில் பலரும் மேல்முறையீடு செய்து வரும் நிலையில், இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் உள்ள நிலையில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

 மகளிர் உரிமை தொகை

இந்த சூழலில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அக்டோபர் மாத தவணை தொகை இன்றே வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட இருக்கிறது. மாதந்தோறும் 15-ம் தேதிகளில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒரு நாள் முன்னதாகவே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட இருக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web