கண்ணைக் கவரும் பெங்களூர் சாலை.. பூத்து குலுங்கும் இளஞ்சிவப்பு நிற மலர்கள்..!!

 
பெங்களூரு நகரம்

பெங்களூர் நகரை தற்போது அலங்கரித்து வரும் இந்த இளஞ்சிவப்பு பூக்களின் வருகையை அனைவருக்கும் தெரியப்படுத்தவும், சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையிலும் கர்நாடக சுற்றுலாத்துறை கடந்த ஆண்டு இந்த மலர்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. மேலும் கேரள சுற்றுலாத் துறையும் இதைப் பகிர்ந்து இந்தப் பூக்களின் பெருமையை வெளிப்படுத்தியது. இந்நிலையில், இந்த சீசனுக்கு, பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. இதனால் பெங்களூருவே இளஞ்சிவப்பு நிறத்தில் கண்ணை கவரும்!


ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் பூக்கும், தபேபுயா அவெலனேடாவின் இந்த இளஞ்சிவப்பு பூக்கள் பெங்களூரில் வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கின்றன. இதனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். பிங்க் ட்ரம்பெட்ஸ், தபேபுயா ரோசா அல்லது பிங்க் புய் என்று அழைக்கப்படும் இந்த மலர்கள் தென் அமெரிக்காவில் பிரத்தியேகமாக வளரும். இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும். இவை நியோட்ரோபிகல் மலர் வகையைச் சேர்ந்தவை. இந்த மலர்களின் அழகு காரணமாக, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெங்களூரு பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.


இந்தியாவில் காலனித்துவ ஆட்சியின் போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் இந்த மலர்கள் கொண்டு வரப்பட்டன. இங்கிலாந்தை தவறவிட்ட ஆங்கிலேயர்கள் இந்த மலரின் மூலம் இங்கிலாந்தின் வெப்பநிலையை கொண்டு வர முயன்றனர். அந்த காலத்தில் நடப்பட்ட இந்த மரங்கள் இன்றும் தொடர்ந்து பூத்துக் குலுங்குவதற்கு பெங்களூரின் சீதோஷ்ண நிலையும் ஒரு காரணம். நாட்டின் பிற பகுதிகளில் வளர கடினமாக இருக்கும் இந்த செடிகள் இங்கு துளிர்க்க ஆரம்பிக்கின்றன. தற்போது பெங்களூரில் உள்ள தெருக்கள், சாலையோரங்கள், சுற்றுலாத் தலங்களில் பூத்துக் குலுங்கும் இந்தப் பூக்களின் வருகையை பலரும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web