வங்கதேச கலவரம்.. ஷேக் ஹசீனா கட்சியின் முக்கிய தலைவர்கள் 29பேர் படுகொலை!
வங்கதேசத்தில் மாணவர் அமைப்புகளின் போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகும் வன்முறை தொடர்கிறது. பிரதமர் பதவி விலகியதையடுத்து, ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தற்போது இடைக்கால அரசாங்கத்தின் புதிய அதிபராக மொஹமட் யுனின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், போராட்டத்தின் போது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் உறுப்பினர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அதாவது அவர்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் 29க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முன்னாள் கவுன்சிலர் முஹம்மதுஷா ஆலமின் வீடு எரிந்ததில் 6 பேரும், சக்திகிரா பகுதியில் நடந்த தாக்குதலில் 10 பேரும், எம்பி ஷகுபில் இஸ்லாம் ஷமீன் வீட்டில் எரிந்ததில் 4 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இதேபோல் இளைஞர் அணியைச் சேர்ந்த 2 தலைவர்கள் உள்பட 19 தலைவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
