பங்களாதேஷ் கலவரம்: 2024 டி 20 மகளிர் உலகக் கோப்பை வங்காளதேசத்தில் நடைபெறுமா?! ஐசிசி பரீசிலனை!

 
வங்கதேசம்
 பங்களாதேஷ் கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்நாட்டின் பிரதமர் நாடு விட்டு தப்பிய நிலையிலும், நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 மகளிர் டி 20 உலகக் கோப்பையை நடத்த உள்ள பங்களாதேஷின் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

வங்கதேசத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனாவும் நேற்று ராஜினாமா செய்து, நாடு விட்டு கிளம்பிய நிலையில், 2024 டி20 மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான மாற்று இடங்களை ஐசிசி பரிசீலிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசம்

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் [BCB], அவர்களின் பாதுகாப்பு ஏஜென்சிகள் மற்றும் எங்கள் சொந்த சுதந்திரமான பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஒருங்கிணைப்பில் முன்னேற்றங்களை ஐசிசி உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது" என்று ஐசிசி இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 
நேற்று வங்காளதேசத்தில் போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்திற்கு முற்றுகையிட்டதால், ஷேக் ஹசீனா வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. மறுபுறம், இராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் நாட்டில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவும் நோக்கில் பொறுப்பேற்றார்.
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் வங்கதேச விமானப்படையின் C-130 போக்குவரத்து விமானமான AJAX1413ல் நேற்று மாலை 6:30 மணியளவில் (IST) இந்தியாவின் ஹிண்டன் விமான தளத்தை அடைந்தார்.


"இந்திய வான்பரப்பிற்குள் நுழைந்ததில் இருந்து காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளம் வரை விமானத்தின் இயக்கம் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டது" என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 
மறுபுறம், தேசிய தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்களிடமிருந்து பிரதமர் இல்லத்தை ஆக்கிரமித்தது உட்பட சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தொடர்ந்து பதற்றம் நிலவியதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் டாக்காவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரைலில் உள்ள முன்னாள் வங்காளதேச கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசாவின் இல்லமும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!