3 நாட்கள் விடுமுறை... வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க!
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் பெட்டிக்கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை என்னதான் டிஜிட்டல் மயமாகிவிட்டாலும் வங்கிகளிலும் வாடிக்கையாளர் கூட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வார இறுதியில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வங்கிப் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 2 வது சனிக்கிழமை என்பதால் செப்டம்பர் 14ம் தேதி விடுமுறை. அடுத்த நாள் செப்டம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை.

இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்கிழமை மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை. மேலும் இதன் காரணமாக வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்கூட்டியே வங்கிப் பணிகளை திட்டமிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
