பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா.... !

 
பன்வாரிலால் புரோகித்

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.  தனிப்பட்ட காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் கடும் மோதல்  நீடித்து வந்த நிலையில் திடீர் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

பன்வாரிலால் புரோகித்
 பஞ்சாப் மாநில   ஆளுநராகவும், சண்டிகரின்   நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்த  நிலையில்   தனது ராஜினமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். அதில்  எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளின் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி ஆகிய  பொறுப்புக்களை  ராஜினாமா செய்கிறேன்.

பன்வாரிலால் புரோகித்

தயவு செய்து இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட  பன்வாரிலால் புரோகித் முன்னதாக அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாடு  மாநிலங்களில் ஆளுநராகவும் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர்.  தமிழகத்தின் 14 வது ஆளுநராக   2017   அக்டோபர்   முதல்  2021  செப்டம்பர் 17 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web