அருவிகளில் குளிக்கத் தடை ... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!!

 
குற்றாலம்

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது .அந்த வகையில் தென்காசியில்   தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது.

குற்றாலம்

நடப்பாண்டில்   தென்மேற்கு பருவமழை சரி வர பெய்யவில்லை என உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு மாத காலம் தாமதமாக சீசன் தொடங்கியிருப்பதால்  இந்த ஆண்டு சீசன் களையிழந்து சற்று மந்தமாகவே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  அந்த வகையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் இன்றி குற்றாலம் அருவிகள் வறண்டு காணப்பட்டது.  நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் சாரல் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர்கொட்டத் தொடங்கியுள்ளன.  

குற்றாலம்

மெயின் அருவியில்  அபாய வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதேபோன்று ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க   தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால்  சுற்றுலா பயணிகள் அருவி கரையோரம் நின்று குடும்பத்துடன் செல்பி எடுத்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web