பிரபல சின்னத்திரை நடிகை பவானி - அமீருக்கு திருமணம்... குவியும் வாழ்த்துகள்!

 
பவானி


சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வரும் அமீர்- பவானி தங்களது திருமணம் குறித்து அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹிட்டடிப்பதற்காகவும், ரசிகர்களிடையே பிரபலமடையவும் காதலர்களாக காட்டிக் கொள்ளும் ஜோடிகளுக்கிடையே நிஜ காதலர்களாக கல்யாணத்தில் வந்து நிற்கிறார்கள் அமீர் - பவானி ஜோடி. 

பவானி
’ரெட்டைவால் குருவி’, ‘சின்னத்தம்பி’ ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான பவானிக்கு கடந்த 2017ல் பிரதீப் என்பவருடன் திருமணமானது. திடீரென பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மெல்ல அதிலிருந்து மீண்டு வந்த பவானி, தற்போது அமீரைக் கரம் பிடிக்கிறார். 

பவானி
பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட பவானியிடம், அந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த கோரியோகிராஃபர் அமீர் தனது அன்பை முதலில் வெளிப்படுத்தினார். ஆனால், நிகழ்ச்சி முடியும் வரையும் அதை ஏற்காமல் இருந்த பவானி, பின் அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் நிலையில், தற்போது தங்களது திருமணம் குறித்து அறிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web