விராட் கோஹ்லிக்கு பிசிசிஐ எச்சரிக்கை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
விராட்கோஹ்லி

 உலகக்கோப்பையில் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் அணி முழுவீச்சில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆகஸ்ட் 30ம் தேதி   ஆசிய கோப்பை தொடங்க இருக்கும் நிலையில்  அதனைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. உலகக்கோப்பையில் கலந்து கொள்ளும் வீரர்கள் பட்டியல்  ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.  அடுத்து இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் விரைவில் அங்கு செல்ல உள்ளனர். அதற்கு முன்பாக பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் இந்திய வீரர்களின் பிட்னெஸ்   யோயோ சோதனை நடைபெற்று வருகிறது.  

விராட்கோஹ்லி

இதன்படி யோயோ டெஸ்டில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி  உடல் தகுதியை நிரூபித்தார். இதில் விராட் கோலி 17.2 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவருடைய பிட்னஸ் தரத்தை வியந்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதே போல் மற்ற வீரர்களும் தங்களுடைய யோயோ மதிப்பெண்களை பகிர வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இந்நிலையில் இந்திய அணிக்குள் நடக்கும் முக்கிய தகவல்களை வெளியே சொல்லக்கூடாது என்பது பிசிசிஐயின் முக்கிய விதிமுறைகளில் ஒன்று.   அந்த வரிசையில் இந்த யோயோ டெஸ்டில் எடுக்கும் மதிப்பெண் பற்றிய தகவல்களை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்கக் கூடாது என்பது தான் விதிமுறை.  

விராட் கோஹ்லி

ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய யோயோ டெஸ்ட் ஸ்கோரை பதிவிட்டு விராட் கோலி அந்த விதிமுறையை மீறியுள்ளார்.இதனை  பிசிசிஐ கண்டித்துள்ளது. இனிமேல் அந்த விதிமுறையை மீறி இது போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து   பிசிசிஐ அதிகாரி  "எந்த ஒரு ரகசியமான விஷயத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என  வீரர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் பயிற்சிகளை செய்யும் போது எடுக்கும் புகைப்படங்களை வெளியிடலாம். ஆனால் மதிப்பெண்களை பகிர்தல் என்பது   ஒப்பந்த விதிமுறையை மீறுவதற்கு வழி வகுக்கிறது" எனக் கூறியுள்ளார்.  இந்த எச்சரிக்கை மற்ற வீரர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web