ஒரே வாரத்தில் உடல் எடை குறைய தினசரி சீரகத் தண்ணீர்...!!

சீர் + அகம்= சீரகம். அகத்தை சீராக்குவதால் சீரகம். இதனை தொடர்ந்து குடித்து வருவதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன.இதில் நிறைந்துள்ள இரும்பு சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு சீரக தண்ணீரை குடித்து வந்தால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இன்றைய வாழ்க்கை முறையில் பாஸ்ட் புட் உணவு கலாச்சாரத்தில் பலரும் ஒபிசிட்டி எனப்படும் அளவுக்கு அதிகமாக எடையுடன் காணப்படுகின்றனர். பின்னர் ஆயிரக்கணக்கில் செலவழித்து மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கின்றனர். இதனை விடுத்து ஆரோக்கிய நடைமுறையாக வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டி வைத்தியத்தை ஒழுங்காக கடைப்பிடித்தாலே போதுமானது.
ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 ஸ்பூன் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலை அந்த தண்ணீரை கொதிக்க வைத்து ஆறியபின் அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம். தொடர்ந்து 6 மணி நேரம் ஊறிய சீரக தண்ணீர், காலையில் முதல் விஷயம் வளர்சிதை அதிகரிப்பதன் மூலமும், குறைந்த கலோரி பானமாக இருப்பதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும். சீரக விதைகளில் உள்ள என்சைம்கள், பெண்களில் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்த உதவும். எடை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது .காலை வெறும் வெயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் அஜீரணத்தால் ஏற்படக்கூடிய வயிற்று வலியை குணப்படுத்தலாம்.
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் சிறிது சீரக தண்ணீரை குடித்து வந்தால் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் பெறலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடிக்கலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு காயங்கள் ஆற நாட்களாகும். சீரகத்தண்ணீரை குடித்து வந்தால் புண்கள், காயங்கள் விரைவில் ஆறும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு சீரகத் தண்ணீர் அருமருந்து. தினமும் உணவு கட்டுப்பாட்டுடன் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை படிப்படியாக குறைய தொடங்கும். உடலில் செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்கிறது. வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்கிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு சீரகம் தான். உடனடியாக அஜீரணத்திலிருந்து விடுபட 200மிலி தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து, கலந்து குடித்தால் நல்ல குணம் காணலாம்.
200மிலி தண்ணீரில் ஒரு சிட்டிகை வறுத்த சீரகத்தூள், சிறிது இஞ்சி, பெருஞ்சீரகம் , உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க விட வேண்டும் பாதியாக வற்றியதும் வடிகட்டி குடிக்கலாம். அனைத்து அஜீரண பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து இது தான். தினசரி உணவில் சீரகத்திற்கு இடமளிப்போம். ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!