தமிழ்நாடு, கர்நாடகா வரிசையில் மேற்கு வங்காளத்திலும் நீட் தேர்வு-க்கு எதிராக தனி தீர்மானம்!!

 
நீட்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வாக நீட் எழுத வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டசபையில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த தீர்மானங்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளன.   இந்தியா முழுவதும் ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டன.

 முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.நாடு முழுவதுமே நீட் தேர்வுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன. தமிழ்நாடு,  மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளன.  கர்நாடகா சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தற்போது மேற்கு வங்க மாநில சட்டசபையிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மேற்கு வங்க மாநில அரசே நடத்திய பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும். மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தி உள்ளது.மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு புதிய நுழைவுத் தேர்வை மாநில அரசு அறிமுகப்படுத்தும். இந்த முடிவு மாநில மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதையும், NEET ன் மையப்படுத்தப்பட்ட வடிவம் குறித்த கவலைகளையும் நிவர்த்தி செய்யும் எனத் தெரிவித்துள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!