முதல் பாலிவுட் படத்திலேயே சிறந்த நடிகை விருது... லேடி சூப்பர் ஸ்டார் அசத்தல்!

 
நயன்

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா . இவரின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விக்கியை திருமணம் செய்துகொண்ட பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்து கொண்டாடித் தீர்க்கின்றனர்.  



இந்நிலையில் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ’ஜவான்’  பாலிவுட் திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் நிலையில் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.  வசூலிலும்  ரூ1000க்கு மேல்   வசூலாகி வசூல் சாதனை செய்தது   குறிப்பிடத்தக்கது.

நயன்
 இந்த படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்ததற்காக தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இத்தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்  குவிந்து வருகின்றன.  அத்துடன் நயன் தான் தான் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர் என்பதை மீண்டும்  நிரூபித்து விட்டார் என ரசிகர்கள்  பதிவிட்டு  வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!