கோவைக்கு சிறந்த ஸ்மார்ட் சிட்டி விருது!! இந்தியாவிலேயே நம்பர் ஒன்!!

 
கோவை

இந்தியா முழுவதும்   52 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டிக்கான திட்ட செயல்பட்டு  முடிவுகளில் இருந்து 88 முன்மொழிவுகள் விருதுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. அதில்  சிறந்த ஸ்மார்ட் சிட்டிக்கான முதல் பரிசை   இந்தியாவின் தெற்கு மண்டல பிரிவில் கோயம்புத்தூர் வென்றுள்ளது. இதற்கான விருது செப்டம்பர் 27ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஸ்மார்ட் சிட்டி விருதுகளை வழங்குகிறார்.  இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும்  இந்த விருது வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை

 இதன்படி  சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப் பணிகள் மற்றும் புதுமையான திட்டப் பணிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி  முக்கிய பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து கோவை நகரம் அசத்தல் சாதனை படைத்துள்ளது.  மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நகரங்களுக்கான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.  

கோவை


அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோயம்புத்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் Built environment பிரிவில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி தேசிய அளவில் முதல் பரிசு பெற்று அசத்தியுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ கோவையை பொறுத்தவரை பந்தய சாலை, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தது, வாலங்குளம், பெரியகுளம், முத்தன்னன்குளம், குறிச்சிகுளம்  உட்பட  பல்வேறு குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நகரின் உட்கட்டமைப்பு பணிகளும் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web