‘பெவர்லி ஹில்ஸ் காப்’ நடிகர் ஜான் ஆஷ்டன் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!
‘பெவர்லி ஹில்ஸ் காப்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் ஜான் ஆஷ்டன் காலமானார். அவருக்கு வயது 76.“பெவர்லி ஹில்ஸ் காப்” படத்தில் ஜான் டாகார்ட் கதாபாத்திரத்தில் நடித்த ஜான் ஆஷ்டன் காலமானதை அவரது மேலாளர் ஆலன் சோமர்ஸ் உறுதிப்படுத்தினார் .
Beverly Hills Cop wouldn’t have been the same without John Ashton who heroically had to pinch his face to hold back laughter as Eddie Murphy made up this hilarious story about super cops pic.twitter.com/YObOlTg6Te
— James Crugnale (@jamescrugnale) September 29, 2024
1984 மற்றும் 1987ல் வெளியான “பெவர்லி ஹில்ஸ் காப்” தொடரின் முதல் இரண்டு பகுதிகளிலும் டிடெக்டிவ் சார்ஜென்ட் ஜான் டாகார்ட்டாக நடித்திருந்தார் ஜான் ஆஷ்டன். 2024ன் “பெவர்லி ஹில்ஸ் காப்: ஆக்சல் எஃப்”ல் தனது கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தார். அவரது கதாபாத்திரம் 2024ல் காவல் துறைத் தலைவராக இருந்தது.
‘ஓ, காட்!’ ல் அங்கீகாரம் பெறாத கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் ‘பார்டர்லைன்’ (1980), ‘மிட்நைட் ரன்’ (1988), ‘லிட்டில் பிக் லீக்’ (1994), ‘கான் பேபி கான்’ (2007), மற்றும் ‘ஆல் ஹேப்பி ஃபேமிலிஸ்’ (2023). ‘M*A*S*H’, ‘Law & Order: SVU’, ‘King of the Hill’ மற்றும் ‘Police Squad!’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். ‘பெவர்லி ஹில்ஸ் காப்’ படத்தின் கடைசி பாகம் கடந்த ஜூலை 3ம் தேதியன்று வெளியானது.
200க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஆஷ்டனுக்கு அவரது மனைவி, ராபின் ஹோயே, அவரது குழந்தைகள் மைக்கேல் ஆஷ்டன் மற்றும் மைக்கேல் தாமஸ் ஆஷ்டன், வளர்ப்புப் பிள்ளைகள் கோர்ட்னி டோனோவன், லிண்ட்சே கர்சியோ மற்றும் ஆஷ்லே ஹோய் மற்றும் ஹென்றி என்ற பேரன் உள்ளனர். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!