உஷார்... செல்லப் பிராணிகளுக்கு உரிமம் இல்லைன்னா ரூ.5,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை!

 
மாடு

சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கான உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நேற்று நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேயர் ஆர்.பிரியா தலைமையிலும், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையிலும் ரிப்பன் மாளிகையில் மன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் போது அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் எழுந்து சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நாய்

அதன் பின்னர், மாநகரில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நவம்பர் 24 முதல் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், நாய்களை கழுத்துப்பட்டை இன்றி பொது இடங்களில் அழைத்து வருவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

அபராதத் தொகையை கோட்ட சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன், ரூ.5.19 கோடி மதிப்பில் 2 லட்சம் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துதல், தரவு மேலாண்மை மென்பொருள் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாய் தெருநாய் வெறிநாய்

மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் 29,455 தூய்மை பணியாளர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கும் பணியை ரூ.186.94 கோடி மதிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாப்பூர் மந்தை வெளிப்பாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு “சீர்காழி கோவிந்தராஜன் சாலை” என பெயரிடவும் மன்றம் ஒப்புதல் அளித்தது.

மொத்தம் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இந்த மன்றக் கூட்டத்தில், மாநகராட்சி நிர்வாகத்தின் முக்கியமான பொது நலத் தீர்மானங்கள் பலவும் அங்கீகரிக்கப்பட்டன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?