உஷார் மக்களே... இன்று முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து... எந்தெந்த நேரத்தில் தெரிஞ்சுக்கோங்க!

 
ரயில்
உஷார்  மக்களே... நீங்கள் வழக்கமாக செல்கிற ரயிலாக கூட இருக்கலாம். மொத்தமாக 55 மின்சார ரயில்கள் இன்று ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னையிலும், புறநகர் பகுதிகளிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரத்துல சென்று சிக்கிக்காதீங்க. உங்களுடைய பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக்கோங்க. சென்னையில் பொதுப்போக்குவரத்து சேவையில்  மின்சார ரயில்கள்  பெரும் பங்கு வகிக்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்து கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வருபவர்கள் பெரும்பாலானோர் மின்சார ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனர். குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான பயணங்களுக்காக மக்கள் இதனை நாடுகின்றனர்

மின்சார ரயில்

இந்நிலையில் இன்று ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் இந்த 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில்  2ம் கட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக  ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை 10 நிமிட இடைவேளையில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.  இரவு 7.19 மணியில் இருந்து நள்ளிரவு 11.59 மணி வரையில் 10 நிமிட இடைவேளையில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு 10 நிமிட இடைவேளையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் ரத்து செய்யப்படுகின்றன

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

இதில் திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயிலும் மொத்தமாக 23 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தை பொறுத்தவரை கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 08.55 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்ட 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web