உஷார்... சென்னையிலிருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு!

 
ரயிலில் கொள்ளை திருட்டு ரயிலில் கொள்ளை திருட்டு

சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பயணித்த கேரளாவை சேர்ந்த வயதான தம்பதியிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலில் இருந்து கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இறங்கிய பின்னர் வீட்டிற்குச் சென்று பைகளை திறந்து பார்த்த போது நகைகள் இல்லை என்பதை தெரிந்து தம்பதி அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கிய போலீசார், அன்றைய ரயில் பயணிகளின் விவரங்கள், ஏசி பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், செல்போன் சிக்னல் பகுப்பாய்வு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த நால்வர் இளைஞர்கள் தம்பதியருக்கு உதவுவது போல அணுகியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேரளா–கர்நாடகா எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் சந்தேகநபர்கள் நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலில் செயல்படுபவர்கள் என்பது சோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

கும்பல் ரெயிலின் ஏசி பெட்டியில் பயணிப்போரிடையே கலந்துகொண்டு, அவர்களின் பைகளை கவனிக்க முன்வரும் பெயரில் நகைகள் மற்றும் மதிப்புள்ள பொருட்களை திருடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நால்வரிடமிருந்தும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து நால்வரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?