உஷார்... வைல்ட் சஃபாரி பேருந்தில் இளம்பெண்ணைத் தாக்கிய சிறுத்தை... பகீர் வீடியோ!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்கா, சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாகும். இங்கு வனத்துறை சார்பில் சிறப்பு சபாரி பேருந்து இயக்கப்பட்டு, வனவிலங்குகள் வாழும் பகுதிகளை நேரடியாக காண வசதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணித்தபோது, அடர்ந்த வனப்பகுதியில் ஒரு சிறுத்தை தோன்றியது. அதை பார்த்த பயணிகள் புகைப்படம், வீடியோ எடுத்து களித்தனர். இந்த நேரத்தில், பேருந்தின் ஜன்னல் கண்ணாடி ஒன்றை சில பயணிகள் சிறிதளவு திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
Shocking video from Bannerghatta National Park; leopard attacking a woman during a safari on Thursday afternoon. The leopard climbed onto the window of the safari van and scratched her hand. pic.twitter.com/KMdFScewiM
— Elezabeth Kurian (@ElezabethKurian) November 13, 2025
அந்த திறந்த இடைவெளியை கவனித்த சிறுத்தை, திடீரென பேருந்துக்குள் நுழைய முயன்றது. அப்போது ஜன்னல் அருகே அமர்ந்திருந்த வஹீதா பானு (56) என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியதில், அவர் கையில் ஆழமான காயம் ஏற்பட்டது. சம்பவத்தை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறியதால், பேருந்து உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு திருப்பி கொண்டு செல்லப்பட்டது.

காயமடைந்த வஹீதா பானு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜன்னல் கண்ணாடியை திறந்துவைத்ததே சிறுத்தை தாக்கத்துக்குக் காரணம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு சபாரி பேருந்துகளில் பாதுகாப்பு விதிகளை மேலும் கடுமைப்படுத்துவது குறித்து வனத்துறை பரிசீலித்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
