உஷார்... மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 35,000 கன அடியாக அதிகரிப்பு!

 
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. காவிரியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, சேலம் மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவு!!..

இதன் தொடர்ச்சியாக, டெல்டா பாசனத்திற்கு 22 ஆயிரம் கன அடியும்,16 கண் மதகுகள் வழியாக 12,500 கன அடியும், கால்வாய்கள் வழியே 500 கன அடி நீரும் என மொத்தம் 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கேற்ப திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் திறப்பு அளவும் இருக்கும் என நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது. தற்போது மேலணைக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?