உஷார்... ‘வாட்ஸ்-அப்’ல திருமண அழைப்பிதழ்... ரூ.97,000 மோசடி!
உஷாராக இருங்க மக்களே... உலகம் முழுவதுமே டிஜிட்டல் துறையின் அசுரத்தனமான வளர்ச்சியில் சதுரங்க வேட்டைக்கு வலை விரித்து ஆயிரங்களில், லட்சங்களில், கோடிகளில் மோசடி நடந்து வருகிறது.
வாட்ஸ்அப்பில் வந்த ஒரு திருமண அழைப்பிதழ் லிங்க்கை கிளிக் செய்தததில் ரூ.97,000 யை ஒருவர் இழந்திருக்கிறார். இது மீண்டும் ஒரு முறை சைபர் மோசடிக்காரர்களின் வேட்டை தொடரும் நிலையில் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபருக்கு அடையாளம் தெரியாத நம்பர் ஒன்றில் இருந்து வாட்ஸ்அப்பில் ஒரு “Wedding Invitation” என்ற மெசேஜுடன் லிங்க் வந்தது. "யார் திருமணம்? என்னன்னு பாக்கலாம்" என்ற ஆர்வத்தில் அவர் லிங்கை கிளிக் செய்துவிட்டார்.

அந்த கிளிக்கில் இருந்த வேகத்தில், அவருடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது அந்த ஹேக்கிங் மூலம், குற்றவாளிகள் அவரது வங்கி கணக்கில் இருந்து மூன்று தனித்தனியான பரிவர்த்தனைகள் மூலம் ரூ.97,000-ஐ பறித்து விட்டனர். தன்னுடைய மொபைல் செயல்படவில்லை என்பதையும், பணம் திருடப்பட்டதையும் உணர்ந்தவர், உடனடியாக சைபர் குற்றப்பிரிவில் புகார் பதிவு செய்துள்ளார்.

இது போன்ற வழக்குகள் தற்போது அதிகரித்து வருகின்றன என போலீசார் தெரிவித்துள்ளனர். தெரியாத நம்பர்களில் இருந்து வரும் லிங்குகளை எப்போதும் திறக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவை போலி வலைத்தளங்களை நோக்கி செல்லும், அதுவே உங்கள் மொபைலை ஹேக் செய்யும் வாய்ப்பிருக்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
