சென்னை வந்தது பவதாரணி உடல்... திநகர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடுகள் தயார்... !

 
பவதாரிணி

 
மகளின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்ய  இசைஞானி இளையராஜா தனது சொந்த ஊரான தேனிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மறைந்த பவதாரிணியின் உடலை விமான நிலைய அதிகாரிகளிடம் இருந்து பெறுவதற்காக பவதாரிணியின் சகோதரர் யுவன் சங்கர் ராஜா வந்திருந்தார்.    திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக  இளையராஜாவின் திநகர்  வீட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா,  பவதாரிணியின் சித்தப்பா மகன்  இயக்குநர் வெங்கட் பிரபு,  கார்த்திக் ராஜா விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.  இயக்குநர் மாரி செல்வராஜ் “ ” ஒலியிலே ஒளி பாய்ச்சிய தேவதையே இனி என் விழி காண் மயில் நீ” என இயக்குநர் மாரி செல்வராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  
மாலை 5 மணிக்கு தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீடு அமைந்துள்ள 3, முகேஷன் சாலை, கண்ணதாசன் சிலைக்கு அருகில் பவதாரிணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என ராஜா குடும்பத்தார்  தெரிவித்துள்ளனர்.  

பவதாரணி
பாடகர் பவதாரிணி மறைவுக்கு ஏ ஆர். ரஹ்மான்   “மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா  இந்த துன்பகரமான வேளையில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என  ட்வீட் செய்துள்ளார்.
 "எனது முதல் பாட்டுப் போட்டிக்கு நடுவர் பவதாரிணிதான்” : பிரபல பாடகி ஸ்வேதா மோகன் இரங்கல் பதிவிட்டுள்ளார்.    நடிகர் வடிவேலு தனியார் தொலைக்காட்சியில்   “தங்க மகள் பவதாரிணியின் இழப்பை அந்த குடும்பம் எப்படி தாங்கும்” என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்
 “மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்” என  நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.  

பவதாரணி


47 வயதான பவதாரணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்தார். இவரது  மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பவதாரணி  ரமணர் பாடல்கள் பாடி மெய்மறக்கச் செய்வது, மயில் போல பாடலுக்கு தேசிய விருது என சாதனைகளுடன் தன் இசைப் பயணத்தை சிறு வயதிலேயே தொடங்கியவர். 
இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பவதாரணி, தன் சகோதரர் யுவன், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். பவதாரணி சபரிராஜை திருமணம் செய்துகொண்ட நிலையில்  குழந்தைகள் இல்லை.  கடந்த  மாதம் தான் பவதாரணிக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது குறித்து கண்டறியப்பட்டது.இலங்கைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் , சிகிச்சை தொடங்கும் முன்னரே அவர் உயிரிழந்ததாகவும் பவதாரணியின் உறவினரும் நடிகையுமான கருணா விலாசினி தெரிவித்துள்ளார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web