சிறுவனின் நுரையீரலில் இருந்த ஊசி.. அறுவை சிகிச்சை இல்லாமலே அகற்றி மருத்துவர்கள் சாதனை!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் நெஞ்சுவலி காரணமாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சிறுவனை பரிசோதித்த மருத்துவக் குழுவினர், சிறுவனின் இடது நுரையீரலில் 4 செ.மீ., அளவில் கூர்மையான தையல் ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கமான முறையில் அகற்றினால் சிறுவனின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததால், மருத்துவர்கள் ப்ரோன்கோஸ்கோபி ( கேமராவுடன் உள்ள மூக்கு அல்லது வாய் வழியாக மெல்லிய குழாய் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்) என்ற அதிநவீன சிகிச்சை முறையில் சிறுவனின் நுரையீரலில் இருந்து ஊசியை அகற்றினர். சிறுவன் தற்போது நலமுடன் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சிறுவனுக்கு சிகிச்சை அளித்த குழந்தைகள் நல மருத்துவர்களான ரஷ்மி ராஜன் தாஸ், கெரிஷ்னா எம் குல்லா, கதன் மற்றும் ராமகிருஷ்ணா ஆகியோரையும் மருத்துவமனை பாராட்டியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!