பிக்பாஸ் 9... கலையரசன் வெளியேற்றம்...4 புதிய வைல்ட்கார்டுகள் !
விஜய் டிவியில் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 இல், இன்று வார இறுதி எவிக்ஷன் நாள் நடைபெற்றது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகிய நால்வர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் வைல்ட்கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் நுழையவிருக்கிறார்கள். இதற்கான எபிசோடுகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன.

இதே நேரத்தில், இன்று காலை பிக்பாஸ் செட்டில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்ட வார இறுதி எவிக்ஷன் எபிசோடு படமாக்கப்பட்டது. இதில் எலிமினேஷனுக்கான பட்டியலில் கானா வினோத், கம்ருதீன், விஜே பார்வதி, கலையரசன் ஆகியோர் இடம் பெற்றனர். ரசிகர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்ற கலையரசன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் வெளியேற்றம் நாளை ஒளிபரப்பாகும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
