பிக்பாஸ் சீசன் 7.. ஒரு நாள் காத்திருங்க... புதிய ப்ரோமோ...!!

 
பிக்பாஸ்7

பிக்பாஸ் சீசன் 7 நாளை அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  2   மாதங்களுக்கு முன்பாகவே, பிக்பாஸ் சீசன் 7 பணிகள் தொடங்கிவிட்டன. அவ்வப்போது இதில் கலந்து கொள்ள உள்ள, போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகிவருகிறது. 



அந்த வகையில், பல பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபட்டு வந்தாலும், யார் யார் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என்பது, நாளைய தினமே முழுமையாக தெரியவரும். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டால் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் குறித்த பஞ்சாயத்துக்கள் தான் அதிகம் சமூக வலைத்தளத்தில் பேசப்படும்.  



இந்நிலையில் விஜய் டிவி தரப்பில் இருந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட 2  பிக்பாஸ் ப்ரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு புரோமோவில் நாளைய தினம் பிக்பாஸ் லான்ச் நடைபெறுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் மிகவும் ஸ்டைலிஷாக கோட் சூட் அணிந்து, வருகையில்... நாயகன் மீண்டும் வர.. எட்டுத்திக்கும் பயம்தானே என்ற பாடல் ஒலிக்கிறது. மற்றொரு ப்ரோமோவில், நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது, போட்டியாளர்கள் யார் என கணித்து விட்டீர்களா? என கமல்ஹாசன் கேட்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web