பிக்பாஸ் 9 ... பார்வதியை குறி வைக்கும் சபரி... ஆட்டம் ஆரம்பம்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இரண்டாவது வாரத்துக்குள் நுழைந்த நிலையில், இந்த வார நாமினேஷன் விவரம் வெளியாகியுள்ளது. முதல் வாரத்தில் நந்தினி விருப்ப அடிப்படையில் வெளியேற, அதன் பின்னர் குறைந்த மக்கள் வாக்குகள் பெற்ற இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இரண்டாவது வார நாமினேஷன் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை தேர்வு செய்யும் விதிமுறையின் கீழ் வாக்கெடுப்பு நடந்தது. இதில் சுபிக்ஷா மற்றும் வியானா, வி.ஜே. பார்வதியை அதிகார மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார் என தெரிவித்து நாமினேஷன் செய்தனர். அதேபோல், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் கம்ருதீனை தேர்வு செய்தனர்.

மொத்தம் 18 போட்டியாளர்கள் வாக்களித்த நிலையில், அதிக நாமினேஷன் பெற்றவர்களின் பட்டியலில் வி.ஜே. பார்வதி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக கம்ருதீன் இடம்பிடித்துள்ளார். இதனுடன் அரோரா, எஃப்.ஜே, அப்சரா, ரம்யா, சபரி, கெமி ஆகியோரும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் மக்கள் வாக்கு மூலம் குறைந்த வாக்குகள் பெறுபவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
