பிக்பாஸ் நடிகை ரூ263/- கோடி மோசடி ?! ரசிகர்கள் அதிர்ச்சி!!

பிரபல மாடல் கீர்த்தி வர்மா. இவர் வருமான வரித்துறையில் பணிபுரிந்து வந்தார். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் பணியில் இருந்து விலகி, நடிப்பு துறைக்கு மாறினார். பிரபல மாடலாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர். மும்பை வருமான வரித்துறையில், வரி விலக்கு பெறுவதற்காக போலி கணக்குகளைத் தாக்கல் செய்திருந்தார். அதில் ரூ.263.95 கோடி அளவுக்கு நடிகை கீர்த்தி வர்மா மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில் வருமான வரித்துறையினர் நடிகை கீர்த்தி வர்மா மீது ரூ.263.95 கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிக் பாஸ் மற்றும் எம்டிவி ரோடீஸ் என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னாள் ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மா உட்பட 14 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் ரூ.263 கோடி டிடிஎஸ் மோசடியில் விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில் 2007 - 2008 முதல் 2008 - 2009 நிதியாண்டுகளில் இந்த மோசடி நடந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட நிதியானது ஷெல் நிறுவனங்கள் மற்றும் பூஷன் ஆனந்த் பாட்டீல் மற்றும் பலரின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதே நேரத்தில் மும்பை தொழிலதிபரான பூசன் பாட்டீல் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆடம்பர பொருட்கள் லோனாவாலா, கண்டாலா, கர்ஜத், புனே மற்றும் உடுப்பி பகுதிகளில் நிலம், மும்பை பகுதிகளில் அடுக்குமாடி வீடுகள், பிஎம்டபள்யூ எக்ஸ் 7, மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 400டி, ஆடி Q7 ரக கார்கள் அனைத்தையும் வாங்குவதற்காக இந்த தொகை செலவிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!