”பிக்பாஸ் புகழ் நடிகைக்கு பாலியல் தொல்லை”.. அதிரடியாக கைது செய்யப்பட்ட கார் டிரைவர்..!

 
ஷெரினா

பெங்களூரைச் சேர்ந்த மாடல் அழகி ஷெரினா. 'பிக் பாஸ் சீசன்-6' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார்.  சமுத்திரக்கனி  நடித்த ‘வினோதயா சித்தம்’ படத்தில் ஷெரினா நடித்திருந்தார். சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.  இந்த நிலையில், ஷெரீனாவின் மேலாளர் கவுரி ஜெகநாதன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி புகார் அளித்தார்.

Bigg Boss Sherina About Crush in BB Home

அந்த புகாரில், ஷெரினாவிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வரும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள், ஷெரீனாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பாலியக் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளனர். இந்த புகாரின் பேரில் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை ஷெரீனாவின் கார் டிரைவர் திருவள்ளூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளையராஜா ஆகியோரை மயிலாடுதுறையில் போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பிக்பாஸிலிருந்து எலிமினேட் ஆன ஷெரினா பெறப்போகும் சம்பளம் இவ்வளவா..? –  News18 தமிழ்

பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சில பிரச்சனை காரணமாக கார் டிரைவர் கார்த்திக்கை நடிகை ஷெரீனா வேலை நிறுத்தம் செய்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது கூட்டாளி இளையராஜாவுடன் சேர்ந்து நடிகைக்கு தொலைபேசி வாயிலாக பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.  இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web