இன்று மாலை பீகார் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அங்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கிறது.

இன்று மாலை செய்தியாளர்களை தேர்தல் ஆணையர்கள் சந்திக்கின்றனர். தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

பீகாரில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் இருந்து வருகின்றன. அங்கு தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
