இன்று பீகாரில் 121 தொகுதிகளில் முதற் கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் குவியும் வாக்காளர்கள்!

 
தேர்தல் தேர்தல்

பீகார் சட்டசபை தேர்தல் இன்று (6-ந் தேதி) 121 தொகுதிகளில் முதல்கட்டமாக நடைபெறுகிறது. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3 கோடி 75 லட்சம், இதில் 10.72 லட்சம் புதிய வாக்காளர்கள், 7.38 லட்சம் பேர் 18 மற்றும் 19 வயதானோர். மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 122 பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளரும் உள்ளனர். முக்கிய வேட்பாளர்களாக இந்தியா கூட்டணியினர் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ், துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா மற்றும் 16 மந்திரிகள் உள்ளனர்.

பீகார் தேர்தல் வடமாநில

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகள் 45,341 எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன, பெரும்பாலானவை கிராமப்புற பகுதிகளில் உள்ளன. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது, இதில் மத்திய உள்துறை, ராணுவ, மாநில தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

முதல்கட்ட தேர்தலையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,650 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடிகள் மற்றும் சுற்றிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றப்பின்னணி கொண்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தம் 348 பார்வையாளர்கள் வாக்களிப்பு செயல்முறையை கண்காணித்து உள்ளனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!