பீகார் முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு.. பாஜக வரலாற்றுச் சாதனை!

 
பீகார் பீகார்

பீகார் மாநில அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. மாநில முதல்வராக இருந்த நிதிஷ்குமார் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய அரசியல் திருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பாட்னாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சாம்ராட் சவுத்ரி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற கோலாகலமான விழாவில் பீகார் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகச் சாம்ராட் சவுத்ரி முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பீகார் மாநில வரலாற்றில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது இதுவே முதல் முறை என்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிதீஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றங்கள் பீகாரில் அரங்கேறியுள்ளன. துணை முதலமைச்சராகப் பணியாற்றி வந்த சாம்ராட் சவுத்ரி தற்போது முதலமைச்சராக உயர்ந்துள்ள நிலையில் மாநிலத்தில் புதிய திட்டங்கள் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் இந்த வரலாற்றுச் சாதனை தேசிய அரசியலில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளதுடன் கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை