200 ஆடுகள், 300 சேவல்கள், 500 அண்டாக்களில் 50000 பேருக்கு பிரியாணி பிரசாதம்...... !

 
பிரியாணி

தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது முனியாண்டி கோவில். இந்தக் கோவில்  சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்து.  இந்த கோயிலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தை மாதம்  2வது வெள்ளிக்கிழமை திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.   சென்னை, திருச்சி, சேலம்  மாவட்டங்களிலிருந்து இந்த கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த மக்கள் வருகை தருகின்றனர்.

பிரியாணி

கோயிலில் மக்கள் என்ன வேண்டிக்கொள்கிறார்களோ, அந்த வேண்டுதல் நிறைவேறிய பின், அதற்கு நேர்த்திக்கடனாக ஆடு, சேவல் இவைகளை  காணிக்கையாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் சுமார்  3 நாட்கள் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர் விரதம் மேற்கொள்கின்றனர்.  திருவிழா அன்று தங்கள் தொழில் செழிக்க பிரியாணி சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.  மக்களால் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட  ஆடுகள் மற்றும் சேவல்களை திருவிழா அன்று சமைத்து, பிரியாணி செய்து பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.
விடியவிடிய   நடைபெறும் இந்த திருவிழாவில் வழக்கமாக 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொள்கின்றனர்.

பிரியாணி

மேலும் சுற்று வட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பிரியாணியை   பெற்றுச் செல்ல அதிகாலை 5 மணி முதலே குவியத் தொடங்கி விடுகின்றனர்.  அந்த வகையில் 89வது ஆண்டு முனியாண்டி கோயில் திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. இரவு முழுவதும் தடபுடலாக தயார் செய்யப்பட்ட பிரியாணி, இன்று அதிகாலை பிரசாதமாக பக்தர்களுக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டது. 200 ஆடுகள், 300 சேவல்களை  பயன்படுத்தி  50 அண்டாக்களில் செய்யப்பட்ட பிரியாணியை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர். முனியாண்டி கோயில் திருவிழாவால், கிராமமே பிரியாணி மணத்தால் நிறைந்தது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web