200 ஆடுகள், 300 சேவல்கள் ,2000 கிலோ அரிசியால் முனியாண்டி கோவிலில் பிரியாணி பிரசாதம்!

 
பிரியாணி

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று வடக்கம்பட்டி முனியாண்டி கோவில். இந்த கோவில்  சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின்   பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும்   முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையில் திருவிழா கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

பிரியாணி

அந்த வகையில் நடப்பாண்டில்  89வது கோயில் திருவிழா இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.இந்த திருவிழாவில் பக்தர்கள் பலர்   ஆடுகள் மற்றும் சேவல்களை நேர்த்திக்கடனாக  செலுத்துவர். அந்த வகையில் நடப்பாண்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகள், 300க்கும் மேற்பட்ட  சேவல்களை  நேர்த்திக்கடனாக செலுத்தினர்.

பிரியாணி

இவைகளுடன்   2000 கிலோ அரிசியையும் ஒன்றாக சேர்த்து பிரியாணி சமைக்கப்பட்டது. பின்னர் அந்த பிரியாணி, வடக்கம்பட்டி கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த 5,000 பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தில் வசித்து வரும் கிராம மக்கள் பாத்திரங்களை எடுத்து வந்து பிரியாணியை அள்ளிச் சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web