வைரல் வீடியோ... மெட்ரோ ரயிலில் மோடிக்கு பிறந்தநாள் பாட்டு!!

 
மோடி

இன்று செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர்   மோடியின் பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவரது பிறந்த மாநிலமான குஜராத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் 100 சதவீத இலவச ஆட்டோ பயணங்களை அறிவித்தனர்.  அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாஜக  ஏற்பாடு செய்திருந்தது.  


கட்சி சார்பில்  மோடியின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வரும் அதே வேளையில் கோயில்களில்   சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. மோட்டெல்லி துவாரகாவில் கட்டப்பட்டுள்ள யஷோபூமி கன்வென்ஷன் சென்டரை   பிரதமர் மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திறந்து வைத்தார்.  மாநாட்டு மையத்துக்கு காரை தவிர்த்து இன்று மக்களோடு மக்களாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.  

மோடி

பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, பெண்கள், குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அவருடன் மெட்ரோ பயணிகள் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது, பெண் ஒருவர் சமஸ்கிருதத்தில் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் பாடினார்.  இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை