பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெள்ளை நிற ஆடையில் பீச் க்ளிக்ஸ்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்!

ஐடி துறையில் பணிபுரிந்து வந்த நடிகை சாக்ஷி அகர்வால், மாடலிங்கில் ஆர்வம் காட்டி, பின்னர் நடிகையாக மாறினார். நடிகை நயன்தாராவுக்கு தரமான ரீ-என்ட்ரி படமான 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கிய 'ராஜா ராணி' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால்.
பின்னர் யோகன், திருட்டு விசிடி, கககா போ போன்ற படங்களில் நடித்தாலும் அவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம்தான். இப்படத்தில் ரஜினியின் மருமகளாக சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார்.இப்படத்திற்கு பிறகு விஸ்வாசம், டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, பகீரா போன்ற படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாகி விட்டார். வெள்ளித்திரை மட்டுமின்றி, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் பிரபலமாக அறியப்பட்டவர் சாக்ஷி அகர்வால்.
குறிப்பாக, 2018ல் சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்த சாக்ஷி அகர்வால், இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று 49வது நாளில் கவினுடன் காதல் தகராறு செய்து வெளியேறினார். . 'கண்ணான கண்ணே' சீரியல்களிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தற்போது மாடலிங் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சாக்ஷி அகர்வால், 'கெஸ்ட் சாப்டர் 2' மற்றும் 'தி நைட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளன, மற்ற புதுப்பிப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வாலுக்கு சுமார் 2.1 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். மேலும் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் சாக்ஷி அகர்வால், இன்று தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக தண்ணீரில் நின்று விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளித்துள்ளார். இன்று 34வது பிறந்தநாளை கொண்டாடும் சாட்சிக்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா