பாஜக புகார்... உதயசூரியன் படத்துடன் பள்ளியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய திமுக அமைச்சர்!

 
அனிதா

பள்ளியில் பிறந்த நாள் விழா கொண்டாடிய அமைச்சர் உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 

அனிதா ராதாகிருஷ்ணன்

இது தொடர்பாக பாரதிய ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி மற்றும் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவின் உதயசூரியன் சின்னத்துடன் கூடிய கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்றனர். 

அனிதா ராதாகிருஷ்ணன்

இந்தப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவிக்க நிர்பந்தம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது தவறான முன் உதாரணமாக அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும் மாவட்ட கல்வி அதிகாரி மீதும் சட்டப்பூர்வ துறை ரீதியிலான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?