பாஜக மகளிரணி நிர்வாகி கழுத்தறுத்து படுகொலை... பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
சாந்தி

பாஜக மகளிரணி நிர்வாகி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். சேலம் அன்னதானப்பட்டியில் வசித்து வருபவர்   கண்ணன்.  அஸ்தம்பட்டி பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி . பாஜக மகளிர் அணி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவர் சேலம் மாநகராட்சி தேர்தலில், 48வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு, பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

காதல் காதலி கொலை தூரோகம்

கண்ணனின் தம்பி கர்ணன் . இவர் அண்ணனின் சலூன் கடையில் பணிபுரிந்து வருகிறார். கர்ணனின் மகள் ராஜேஸ்வரி . அன்னதானப்பட்டியில்  மோகன்லாலை காதலித்து வந்தார்.  
இந்நிலையில்,  செப்டம்பர் 13ம் தேதி, ராஜேஸ்வரியும், மோகன்லாலும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனை ராஜேஸ்வரியின் பெற்றோர் கண்டித்தனர். இதனால் காதல் தம்பதி சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில்  தஞ்சம் அடைந்தனர்.  இருதரப்பு உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராஜேஸ்வரி, காதல் கணவன் மோகன்லாலுடன் செல்வதாக கூறிச்சென்றார்.  

போலீஸ்
 கர்ணன், மகள் காதல் திருமணம் செய்ததற்கு அண்ணி சாந்தி தான் காரணம் எனக் கூறி   அங்கு கோபத்துடன் வந்துள்ளார். ராஜேஸ்வரி மற்றும் சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் சாந்தியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தியை சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web