பாஜக தலைவர் மல்ஹோத்ரா காலமானார்... பிரதமர் மோடி நேரில் அஞ்சலி!

 
மல்ஹோத்ரா

 பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.

கடந்த சில நாட்களாகவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக மல்ஹோத்ரா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.


டெல்லி பாஜகவின் முதல் தலைவராக விஜய் குமார் மல்ஹோத்ரா பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. 5 முறை எம்.பி.யாகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த மல்ஹோத்ரா, வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.  

மல்ஹோத்ரா

டெல்லியில் உள்ள ராக்பஞ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மல்ஹோத்ரா உடலுக்கு டெல்லி அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “விஜய் குமார் மல்ஹோத்ரா தனித்துவமான தலைவராக விளங்கினார். மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்த மல்ஹோத்ரா, டெல்லி பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.  அவரது மறைவு வேதனை அளிக்கிறது. மல்ஹோத்ராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?