பகீர்... வீடியோ எடுக்க முயற்சித்த போது ஆற்றில் விழுந்த பாஜக எம்.எல்.ஏ!

 
பாஜக

தலைநகர் டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் நெகி, யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த அவர், யமுனை ஆற்றங்கரையில் நின்றவாறு வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென நிலைதடுமாறிய ரவீந்தர் சிங், சமநிலையை இழந்து ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் அங்கு இருந்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆற்றுக்குள் குதித்து அவரை மீட்டனர். சில நிமிடங்கள் கழித்து அவர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் “யமுனையை சுத்தப்படுத்த வந்தவர் தானே தண்ணீரில் விழுந்தார்” என நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!