71 பேர் .... பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 
பாஜக

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அங்கு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது — முதல் கட்டம் நவம்பர் 6, இரண்டாவது கட்டம் நவம்பர் 11. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும்.மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், முதல் கட்டத்தில் 121 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 17 அன்று முடிவடைகிறது. இதையடுத்து, முக்கியக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு வேகம் பெற்றுள்ளது.

பாஜக

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொகுதி பங்கீடு ஏற்கனவே நிறைவு பெற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பீகார் தேர்தலில் பா.ஜனதா (BJP) மற்றும் ஐக்கிய ஜனதாதளம் (JDU) தலா 101 தொகுதிகளில் போட்டியிடும். லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 29 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகியவற்றுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பீகார்

இந்நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 71 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதல்வர் விஜயகுமார் சின்ஹா லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?