பாஜக அதிர்ச்சி... அடுத்தடுத்து விலகும் எம்.பி.க்கள்... கெளதம் கம்பீரைத் தொடர்ந்து ஜெயந்த் சின்ஹா திடீர் விலகல்!

 
ஜெயந்த் சின்ஹா

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரைத் தொடர்ந்து பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா, தன்னை நேரடி தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்குமாறு கட்சித் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

விரைவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்றும், தன்னை நேரடி தேர்தல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கட்சித் தலைவர் ஜேபி நட்டாவிடம்  பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா கோரிக்கை விடுத்துள்ளார். 


உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் தான் கவனம் செலுத்தி வருவதால், தன்னால் தேர்தல் பணிகளில் ஈடுபட இயலாது என்றும், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் நான் கவனம் செலுத்தும் வகையில், எனது நேரடி தேர்தல் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு மாண்புமிகு கட்சித் தலைவர் ஸ்ரீ ஜே.பி.நட்டாஜியிடம் கேட்டுக் கொண்டேன். நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளில் நான் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று பாஜக எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

“கடந்த பத்து ஆண்டுகளாக பாரத் மற்றும் ஹசாரிபாக் மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. மேலும், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திரமோடிஜி, மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாஜி மற்றும் பாஜக தலைமை வழங்கிய பல வாய்ப்புகளால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.


ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி.யாக இருக்கும் ஜெயந்த் சின்ஹா, முன்னதாக, அவர் 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இந்தியாவின் அமைச்சர்கள் குழுவில் பணியாற்றினார், மேலும் நிதி அமைச்சராகவும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 

மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் செயல்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் விரிவுபடுத்திய உடான் பிராந்திய இணைப்புத் திட்டத்தை தொடங்குவதற்கு உதவியவர் ஜெயந்த் சின்ஹா.  ​​'டிஜிட்டல்ஸ்கை ட்ரோன் கொள்கை' மற்றும் 'டிஜியாத்ரா' டிஜிட்டல் டிராவலர் திட்டம் உட்பட பல டிஜிட்டல் முயற்சிகளையும் செயல்படுத்தினார்.

பாஜக எம்.பி, கௌதம் கம்பீர் நட்டாவை கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரிய சில மணிநேரங்களுக்குப் பிறகு ஜெய்ந்த் சின்ஹாவும் கோரிக்கை விடுத்துள்ளது பாஜக தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

லோக்சபா வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்தடுத்து எம்.பி.க்கள் தேர்தலில் இருந்து விலகுவது தொண்டர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web