பாலே கிடைக்கல... இனி பிளாக் டீ, லெமன் டீ தான்... டீக்கடைகளில் களைகட்டும் விற்பனை... !!

 
ப்ளாக் டீ

மிக்ஜாம் புயலால்  சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்னமும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் பால், பிரெட், குடிநீர்  கிடைக்காமல் பல இடங்களிலும் மக்கள்  கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   80 சதவீதத்திற்கும் மேலான பகுதிகள் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஆனால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலும் 4வது நாளாக மழை நீர் தேங்கியுள்ளது.

ப்ளாக் டீ


 இந்த மழை நீருடன் தற்போது கழிவு நீரும் சேர்ந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இந்த  சுகாதார சீர்கேடு  காரணமாக தொற்றுநோய் பரவலாமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.  பல பகுதிகளில் இதுவரை தங்கள் பகுதிக்கு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ யாரும் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .  பல இடங்களில் மக்கள்  தாங்களாகவே ஆபத்தான முறையில் கழுத்தளவு நீரில் இறங்கி வெளியேறத் தொடங்கியுள்ளனர். 

பிளாக் டீ
இது ஒரு புறம் மறுபுறம் பால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 3 வது நாளாக பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  பால் விநியோகத்தை சீரமைக்க அரசு எடுத்த முயற்சிகள் எதுவும்  பலனளிக்கவில்லை .  அம்பத்தூர் பண்ணையை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு பால் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடங்கப்படவில்லை.  சென்னை முழுவதுமே பால் தட்டுப்பாடு நிலவுவதால் டீக்கடைகளில் விற்பனை மந்தமாகியுள்ளது.  கடைகளில் வழக்கமான பால் கலந்த டீக்கு பதிலாக, பால் இல்லாத பிளாக் டீ, புதினா டீ, லெமன் டீ ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web