ரத்த சிவப்பாய் மாறிய கடல்... பீதியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!!

 
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான். புதுச்சேரி கடல்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் அலை சீற்றத்துடனும், கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்டு வருகிறது. 


 புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடல் பகுதி காலை முதலே சிகப்பு நிறமாக காட்சி அளித்து வருகிறது. இது தொடர்பாக புதுச்சேரி முழுவதும் வேகமாக பரவவே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.குறிப்பாக இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மாற்றத்திற்கு காரணம் என்னவென்றால் ஆற்றில் உருவாகும் ஒரு வகையான பூஞ்சை காளான் கடல் நீரில் கலக்கும்போது இந்த ரசாயன மாற்றம் ஏற்பட்டு அதன்காரணமாக கடல் நீர் செந்நிறமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடல்நீரானது செந்நிறமாக மாறியுள்ளதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். புதுச்சேரி நகர கடற்கரை பகுதிகள் மட்டுமின்றி, கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூர அளவிற்கு இந்த நிறமானது மாறியுள்ளது. மேலும் இந்த நிறமானது படிபடியாக நாளை அல்லது நாளை மறுதினம் குறைந்து மீண்டும் நீலநிறமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

புதுச்சேரி

காலநிலை மாற்றமாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல்நீரானது 500 மீட்டர் அளவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், வீடியோவாக பதிவு செய்தும் கடல் முன்பு நின்று செல்பி எடுத்தும் ஆச்சரியத்துடன் பார்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கடல் நிறம் திடீரென மாறி உள்ளதால் கடலில் இறங்கி நிற்கவோ குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைக்கு வரும் பொது மக்களை கண்காணிக்க போலீசாரும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web