கடலில் படகு கவிழ்ந்து கோர விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 மீனவர்கள்!

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 7 மீனவர்கள் சக மீனவர்களால் மீட்கப்பட்டனர். தூத்துக்குடி தெர்மல்நகர் அருகே உள்ள சுனாமி காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (40). அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (32), பழனி (38), நாகராஜ் (34), சக்திவேல் (20), கணேஷ் (21), பாலா (27), முத்து (20) ஆகியோர் நேற்று அதிகாலை பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பைபர் படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 7 மீனவர்கள் படகை பிடித்தபடி கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த புன்னக்காயல் மீனவர்கள் விரைந்து வந்து 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா