கன்னியாகுமரியில் படகு சவாரி ரத்து... விவேகானந்தர் மண்டபம் செல்லத் தடை!

 
கன்னியாகுமரி

 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது.அந்த வகையில் கேரளா, கர்நாடகா மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.  

கன்னியாகுமரி

தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரியில் குமரிமுனை,  அகத்தீஸ்வரர், கொட்டாரம், அஞ்சுகிராமம், தோவாளை ,ஆரல்வாய்மொழி, தனிக்கார கோணம், கீரிப்பாறை மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே  மழை பெய்து வருகிறது.  
குமரி கடலில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  

கன்னியாகுமரி

சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு அருகே சென்று பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே குமரிக்கடலில் கடல் அலைகள்  ஆக்ரோஷமாக அதிக உயரத்துடன் எழுந்து வருவதால் யாரும் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில்  மணக்குடி, கோவளம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நாட்டுப்படகு  மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web