கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வடைந்துள்ளது. இதன் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருவதுண்டு. அதிகாலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிக்கவும், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிடவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வழக்கம்போல் இன்றும் விவேகானந்தர் மண்டபத்தைக் காண ஏராளமானோர் காத்துக்கிடந்தனர். இந்நிலையில், கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்துபோனது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க இருந்த படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் கடற்கரையின் பிற பகுதிகளை சுற்றிப்பார்க்க தொடங்கினர். கடலின் நீர்மட்டம் தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணிக்கு படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
