பிரபல துணிக்கடை ஊழியர்கள் தங்கும் விடுதியில் சோகம்... பாய்லர் வெடித்து கட்டிடச் சுவர்கள் இடிந்து 4 பேர் படுகாயம்...!

 
ஜெயச்சந்திரன்

செங்கல்பட்டு மாவட்டம்   பள்ளிக்கரணையில் பிரபல ஜவுளிக்கடையான ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு  சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு உணவும் இங்கேயே தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று காலையும் உணவு தயாரிக்கும் போது பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது.

ஜெயச்சந்திரன்

இந்த பாய்லர் திடீரென வெடித்ததில்  கட்டிடச் சுவர்கள் இடிந்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேருக்கு லேசான காயமும் ஒருவருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளது.   இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயச்சந்திரன்

அத்துடன் விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதே நேரத்தில் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்தனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web