பிரபல இந்தி திரைப்பட நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி!

 
தர்மேந்திரா

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 90. எனினும் தர்மேந்திரா குடும்பத்தினர் இது குறித்து தெரிவிக்கையில், வயது காரணமான வழக்கமான பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறினர். 

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

இது குறித்து அவரது குடும்பத்தினர் மேலும் தெரிவிக்கையில், “தர்மேந்திரா நலமாகவே உள்ளார். எவ்வித உடல்நலப் பிரச்னையும் இல்லை. வழக்கமான சுகாதார பரிசோதனைக்காகவே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்” என்றனர்.

‘ஷோலே’, ‘சத்கர்’, ‘யாதோன் கி பாராத்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த தர்மேந்திரா, கடந்த சில ஆண்டுகளாக திரை உலகில் குறைவாகவே தோன்றிவருகிறார். தற்போது அவர் உடல்நிலை நலமாக இருப்பதாக குடும்பம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!