பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்... கேப்டன் உட்பட 6 வீரர்கள் பலி!

 
பாகிஸ்தான்
 

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பகுதியில் ராணுவ வாகனம் மீது நடைபெற்ற திடீர் வெடிகுண்டு தாக்குதலில் கேப்டன் உள்பட 6 வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையோரமான குர்ரம் பழங்குடியினர் மாவட்டத்தின் சுல்தானி பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் வாகனம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினரின் குழு திடீரென ராணுவ வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் முன்கூட்டியே பதுக்கியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். வெடிப்பு மிகுந்த சத்தத்துடன் நிகழ்ந்ததில் வாகனம் சிதறி நொறுங்கியது. இதில் ராணுவ கேப்டன் ஒருவர் உள்பட ஆறு வீரர்கள் உடனடியாக உயிரிழந்தனர்.இதற்குப் பிறகு அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்தது. நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு கூடுதல் ராணுவம் அனுப்பப்பட்டு, மீதமுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க பரவலான தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.இந்த மாத தொடக்கத்திலும் அதே மாகாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடந்த தாக்குதலில் 9 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 2 அதிகாரிகள் உயிரிழந்திருந்தனர். தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பே இதற்கும் காரணமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதிகாரப்பூர்வ தகவல்படி, கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் TTP பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதால், அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!